மேலும் செய்திகள்
நல்லவாடு அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி
29-Sep-2024
புதுச்சேரி: புதுச்சேரி இளங்கோ அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.பள்ளி துணை முதல்வர் கோகிலாம்பாள் தலைமை தாங்கி, கண்காட்சியை துவக்கி வைத்தார். கண்காட்சியில் உயர்நிலை மற்றும் மேல்நிலை அளவில் 100க்கும் மேற்பட்ட அறிவியல் படைப்புகள் இடம்பெற்றன. கண்காட்சியினை அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் பார்வையிட்டனர். சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
29-Sep-2024