மேலும் செய்திகள்
அறிவியல் கண்காட்சி படைப்புகள் அசத்தல்
26-Aug-2025
புதுச்சேரி: லாஸ்பேட்டை புனித சூசையப்பர் குளுனி மேனிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. பள்ளி முதல்வர் ரோசிலி தலைமை தாங்கினார். குளுனி இல்லத் தலைவி செலின், பள்ளி துணை முதல்வர் பான்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓய்வு பெற்ற அறிவியல் ஆசிரியர் சின்னப்பா கண்காட்சியினை துவக்கி வைத்து, பார்வையிட்டார். கண்காட்சியில் மாணவிகளின் படைப்பாற்றல் மற்றும் கற்பனை வளத்தை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருந்தது. இதில் சங்க இலக்கிய நுாலான பதிற்றுப்பத்து காட்சிகள், இயற்கையை பாதுகாக்கும் முறைகள், இயற்கையை மனிதன் எவ்வாறு அழிக்கிறான் அதனை எவ்வாறு பாதுகாக்க வேண்டும். காற்று மாசுபடுவதால் ஏற்படும் விளைவுகள், நீரியல் சுழற்சி, கொரோனா, உட்புற வெளிப்புற விளையாட்டுகள், பெயர்ச் சொற்கள், கடிதம் தன் வரலாறு கூறுதல், கணிதம், வரலாறு, பண்டைக்கால, நவீன காலம்உள்ளிட்ட நுாற்றுக்கும் மேற்பட்ட படைப்புகள் இடம்பெற்றன. ஒவ்வொரு பாடப்பிரிவிற்கும் ஏற்ற இயங்குநிலை,இயங்காநிலை மாதிரிகள் கண்காட்சியில் இடம்பெற்றன. கண்காட்சியினை ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் பார்வையிட்டனர்.
26-Aug-2025