உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அறிவியல் கண்காட்சி

அறிவியல் கண்காட்சி

வில்லியனுார்: வில்லியனுார்அரசு பெண்கள் நடுநிலைப் பள்ளி வளாகத்தில் அறிவியல் கண்காட்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் குணசெல்வி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக புதுச்சேரி கல்வித்துறை பெண்கல்வி துணை இயக்குனர் ராமச்சந்திரன், அறிவியல் கண்காட்சி அரங்கை திறந்துவைத்துபார்வையிட்டார். பள்ளி அறிவியல் ஆசிரியர்கள் சரவணன், ஜபீன், கருணகாகரன், பிரேமா மற்றும் ரவிசங்கர் ஆகியோர் வழிகாட்டுதலின் படி பள்ளியை சேர்ந்தமாணவியர்கள் சார்பில் சுமார் 180க்கும் மேற்பட்டஅறிவியல் படைப்புகள் கண்காட்சியில் இடம் பெற்றது.வில்லியனுார் பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் கண்காட்சியை பார்வையிட்டனர். கண்காட்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் முருகையன், வேலாயுதம், மகாராணி, கனகா, வள்ளி மற்றும்அனைத்து ஆசிரியர்கள், ஊழியர்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை