மேலும் செய்திகள்
விபத்தில் வாலிபர் பலி
21-Oct-2026
வில்லியனுார்: வில்லியனுார் அடுத்த ஆத்துவாய்க்கால்பேட்டை சேர்ந்தவர் புதுராஜ் மகன் புனித்ராஜ்,26; பிளம்பர். திருமணமாகவில்லை. இன்று (நவ.,18) இரவு 9:30 மணியளவில் வில்லியனுாரில் இருந்து அவரது வீட்டிற்கு பாஜாஜ் ஆக்சஸ் ஸ்கூட்டரில் அதிவேகமாக சென்று கொண்டிருந்தார். கட்டுப்பாட்டை இழந்த ஸ்கூட்டர் சுல்தான்பேட்டை மெயின்ரோட்டில் வேக கட்டுப்பாட்டிற்கு சாலையில் வைத்திருந்த பேரிகார்டு மீது மோதி, சென்டர் மீடியன் மீது விழுந்தார். தலையில் படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவலறிந்த வில்லியனுார் போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர் சந்திரகுமார், சம்பவ இடத்திற்கு சென்று, புனிதராஜ் உடலை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும், விபத்து குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.
21-Oct-2026