உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  ஸ்கூட்டர் திருட்டு

 ஸ்கூட்டர் திருட்டு

புதுச்சேரி: அரியாங்குப்பம், திருமலை நகரை சேர்ந்தவர் சக்திவேல், 52. இவர், புதுச்சேரி பாலதண்டாயுதபாணி வீதியில் தனியார் கம்பெனியின் குளிர்பான குடோன் நடத்தி வருகிறார். இவர் கடந்த மாதம் 25ம் தேதி காலை 10:40 மணிக்கு தனது ஸ்கூட்டரை (பிஒய்.05.9528) நிறுத்தி விட்டு குடோனிற்குள் சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது, அங்கு நிறுத்தியிருந்த ஸ்கூட்டரை மர்ம நபர் ஒருவர் ஸ்டார்ட் செய்து ஓட்டிச் சென்றார். சக்திவேல் துரத்தி சென்றும் பிடிக்க முடியவில்லை. இது குறித்து சக்திவேல் கொடுத்த புகாரின் பேரில், உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை