உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஸ்கூட்டி சேதம்: 2 பேர் மீது வழக்கு

ஸ்கூட்டி சேதம்: 2 பேர் மீது வழக்கு

புதுச்சேரி : எஸ்.பி., அலுவலகம் எதிரே நிறுத்தப்பட்டிருந்த ஸ்கூட்டியை சேதப்படுத்திய 2 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.சாரம், சக்தி நகரை சேர்ந்தவர் ஜார்ஜ், 36; நகராட்சி கழிப்பிடத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கும், இவரது உறவினர்களான கிறிஸ்டினா, ஆரோக்கிய மேரி ஆகியோர் இடையே சொத்து பிரச்னை தொடர்பாக முன்விரோதம் இருந்து வருகிறது. இது தொடர்பாக ஏற்பட்ட தகராறு காரணமாக உருளையன்பேட்டை போலீசில் வழக்கு பதியப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.இந்நிலையில், அந்த வழக்கு தொடர்பான பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், நேற்று முன்தினம் பெரியக்கடை கிழக்கு எஸ்.பி., அலுவலகத்தில் நடந்த மக்கள் மன்றத்திற்கு இரு தரப்பினரும் வரவழைக்கப்பட்டிருந்தனர்.அதற்காக ஜார்ஜ் தனது ஸ்கூட்டியை எஸ்.பி., அலுவலகம் எதிரே நிறுத்திவிட்டு, மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அங்கு இரு தரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் உடன்பாடு ஏற்படாத நிலையில், மக்கள் மன்றத்தில் இருந்து வெளியே வந்தபோது இரு தரப்பினர் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.அதில் கிறிஸ்டினா, ஆரோக்கிய மேரி ஆகியோர் ஜார்ஜ் வந்த ஸ்கூட்டியை உடைத்து சேதப்படுத்தியதாக தெரிகிறது. ஜார்ஜ் அளித்த புகாரின் பேரில், பெரியக்கடை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை