உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பூஞ்சேரி ஏரி கலங்கலில் சிற்பக்கூட கற்கள் குவிப்பு

பூஞ்சேரி ஏரி கலங்கலில் சிற்பக்கூட கற்கள் குவிப்பு

மாமல்லபுரம்: பூஞ்சேரி ஏரி கலங்கல் பகுதியில், சிற்பக்கூட கற்கள் குவித்து துார்க்கப்படுவதாக, அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். மாமல்லபுரம், பூஞ்சேரி பகுதியில் உள்ள பூஞ்சேரி ஏரி, பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த ஏரியின் உபரி நீர் வெளியேறும் கலங்கல் பகுதி, திருக்கழுக்குன்றம் சாலை அருகில் உள்ளது. இந்நிலையில், தனியார் சிற்பக்கூடங்களில் இருந்து வெளியேற்றப்படும் பாறை கற்கள், ஏரி கலங்கலின் முகப்பு பகுதியில் குவிக்கப்பட்டு துார்க்கப்பட்டு வருகிறது. கடந்தாண்டு பல்வேறு தேவைகளுக்கு, ஏரியில் இருந்து கிராவல் மண் எடுத்த ஒப்பந்ததாரர், கலங்கல் பகுதியில் குவிக்கப்பட்டிருந்த கற்களை அகற்றி, லாரி செல்வதற்கான பாதை உருவாக்கினர். தற்போது மீண்டும், கலங்கல் பகுதியில் கற்கள் குவிக்கப்பட்டு வருகின்றன. இந்த கற்களை அகற்றவும், மீண்டும் குவிக்காமல் தடுக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை