உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / உரிமம் பெறாமல்விடுதி நடத்தினால் சீல்

உரிமம் பெறாமல்விடுதி நடத்தினால் சீல்

அரியாங்குப்பம் : அரியாங்குப்பம் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில், உரிமம் பெறாமல் தங்கும் விடுதிகள் நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, ஆணையர் எச்சரித்துள்ளார். இதுகுறித்து, அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் செய்திக்குறிப்பு; அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில், தங்கும் விடுதிகள், வணிகம் மற்றும் தொழில் செய்யும் நிறுவனங்கள் உரிமம் பெறாமல் நடத்தி வருவது தெரியவந்துள்ளது. எனவே, 7 நாட்களுக்குள் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் உரிமம் பெற வேண்டும். மேலும், உரிமம் பெற்றும், புதுப்பிக்கபடாமல் இருக்கும் தங்கும் விடுதிகள் உள்ளிட்ட தொழில் நிறுவனங்கள், உடனடியாக புதுப்பித்து கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில், நடவடிக்கை எடுத்து நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை