கடற்கரையை ஒட்டிய பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள்; ரோந்து படகில் சென்று டி.ஜி.பி., ஐ.ஜி., ஆய்வு
புதுச்சேரி: கடற்கரை ஒட்டிய பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டி.ஜி.பி., ஐ.ஜி., உள்ளிட்ட அதிகாரிகள் ரோந்து படகில் சென்று ஆய்வு நடத்தினர்.புத்தாண்டு கொண்டாட ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் புதுச்சேரியில் குவிந்தனர். ஓட்டல்கள், ரிசார்ட்டுகள், தனியார் நிர்வகிக்கும் கடற்கரைகளில் ஆட்டம் பாட்டத்துடன் புத்தாண்டு நிகழ்ச்சிகள் நடந்தது.புத்தாண்டு கொண்டாட்டத்தில் கடலில் இறங்கி விபத்து ஏதும் ஏற்படாதபடி தடுப்பு கட்டைகளும் கட்டப்பட்டது. கடற்கரை ஒட்டிய பகுதியில் செய்யப்பட்டுள்ள புத்தாண்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டி.ஜி.பி., ஷாலினி சிங், ஐ.ஜி., அஜித்குமார் சிங்ளா, டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம், சீனியர் எஸ்.பி.,க்கள் கலைவாணன், நாரா சைதன்யா, எஸ்.பி.,க்கள் நேற்று தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலோர காவல்படை (கோஸ்ட் கார்டு) ரோந்து படகில் சென்று ஆய்வு நடத்தினர்.