விமான நிலையத்தில் பாதுகாப்பு ஒத்திகை
புதுச்சேரி: லாஸ்பேட்டை விமான நிலையத்தில் விமானம் கடத்தப்பட்டால் கடைபிடிக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.இந்தியா முழுதும் உள்ள விமான நிலையங்களில், தீவிரவாதிகளால் விமானம் கடத்த படும்போது செயல்பட வேண்டிய நடவடிக்கைள் குறித்து விளக்கும் ஒத்திகை நிகழ்ச்சி நடந்து வருகிறது. அதன்படி லாஸ்பேட்டை விமான நிலையத்தில் நடந்த ஒத்திகை நிகழ்ச்சியில், லாஸ்பேட்டை விமான நிலைய இயக்குனர் ராஜசேகரன் கலந்து கொண்டு விமானத்தை தீவிரவாதிகள் கடத்தும் போது நாம் செயல்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.நிகழ்ச்சியில், போலீஸ் எஸ்.பி., ரகுநாயகம், ஐ.ஆர்.பி.என்., போலீஸ், தீயணைப்பு வீரர்கள், மருத்துவ ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.