உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சிவலோகநாத கோவிலில் விதைத்தெளி உற்சவம்

சிவலோகநாத கோவிலில் விதைத்தெளி உற்சவம்

காரைக்கால் : காரைக்கால், தலத்தெரு சிவகாமி அம்பாள் சமேத சிவலோக நாத சுவாமி கோவிலில் விதைத்தெளி உற்சவம் நடந்தது.திருத்தெளிச்சேரியில் நீண்ட காலமாக மழையின்றி மக்கள் வறுமையில் வாடினார். பயிர்கள் விளைச்சலின்றி உணவு பஞ்சம் ஏற்பட்டு ஜீவராசிகள் மடியத் துவங்கின. இதனை கண்ணுற்ற ஈசன் உழவுப்படைசூழ உழவுத் திருமேனியாகி இவ்வூரில் நெற்கழனிகள் பக்கம் சென்று உழுது விதை தெளித்து கரையேறினார்.பின், மழை பெய்யத் துவங்கி, நீர்வளம் பெருகி சுபிட்சம் ஏற்பட்டது. வறுமை நீங்கி மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இதை நினைவுக்கூறும் வகையில், ஆண்டு தோறும் ஆனி மாதம் சிவலோகநாதர் கோவிலில் விதைத்தெளி உற்சவம் நடந்து வருகிறது. அதன்படி விழா கடந்த 12ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. நேற்று விதைத்தெளி உற்சவம் நடந்தது. தொடர்ந்து சிவலோகநாத சுவாமி வீதியுலா நடந்தது. ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி