உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / விதை உற்பத்தி பயிற்சி முகாம் 

விதை உற்பத்தி பயிற்சி முகாம் 

பாகூர்: கன்னியக்கோவில் உழவர் உதவியகத்தில், வேளாண் பயிர்களில் விதை உற்பத்தி பயிற்சி முகாம் நடந்தது. புதுச்சேரி வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை ஆத்மா திட்டத்தின் கீழ் நடந்த முகாமில்,  வேளாண் அலுவலர் வளர்மதி வரவேற்றார். விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலைய வல்லுனர் நடராஜன், உளுந்து பயிரில் விதை உற்பத்தி தொழில்நுட்பம் குறிதும், புதுச்சேரி காமராஜர் வேளாண் அறிவியல் நிலைய ஓய்வு பெற்ற பூச்சியியல் துறை வல்லுனர் விஜயகுமார் உளுந்து பயிரில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்தும் பேசினர். வேளாண் அலுவலர் கலைச்செல்வன், மண்வள மேம்பாடு மற்றும் மண் மாதிரி எடுப்பது குறித்து விளக்கினார். இப்பயிற்சி முகாமின் ஒரு பகுதியாக, மணப்பட்டு, உச்சிமேடு, கிருமாம்பாக்கம், பிள்ளையார்குப்பம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், திண்டிவனம் எண்ணெய் வித்து ஆராய்ச்சி நிலையத்திற்கு களப் பயணமாக சென்று, அறிவியல் வல்லுனரிடம் கலந்துரையாடினர். ஏற்பாடுகளை, உதவி வேளாண் அலுவலர் முருகன், செயல் விளக்க உதவியாளர் விஜயகுமார், தனசேகரன், ஆத்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர் ஆறுமுகம் ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை