உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசு பள்ளி மாணவிகளுக்கு  தற்காப்பு பயிற்சி

அரசு பள்ளி மாணவிகளுக்கு  தற்காப்பு பயிற்சி

புதுச்சேரி; தற்காப்பு கலை பயிற்சி பெற்ற அரசு பள்ளி மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.வீராம்பட்டினத்தில் உள்ள சிந்தனை சிற்பி சிங்காரவேலர் அரசு உயர்நிலைப்பள்ளி, ஜீவரத்தினம் அரசு பெண்கள் நடுநிலைப்பள்ளி மாணவிகளுக்கு கல்வித்துறையின் சமக்ர சிக் ஷா திட்டத்தின் கீழ் தற்காப்பு கலை பயிற்சி 3 மாதமாக நடந்து வந்தது.பயிற்சியினை தற்காப்பு கலை பயிற்சியாளர் சென்சாய் சரவணன் அளித்தார். இப்பயிற்சியில் அரசு பள்ளிகளை சேர்ந்த 100க் கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். பயிற்சியின் நிறைவு விழா மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நடந்தது.விழாவிற்கு, பள்ளி முதல்வர்கள் விஜயராணி, அரிகோவிந்தன் ஆகியோர் தலைமை தாங்கினர். புதுச்சேரி பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் பாலசுப்ர மணியன், லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளர் ராமு ஆகியோர் கலந்து கொண்டு மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினர். பயிற்சி பெற்ற மாணவி கள் தற்காப்பு கலையை செய்து காட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ