உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / முதியோர் கல்வி திட்டம் துவக்கம்

முதியோர் கல்வி திட்டம் துவக்கம்

புதுச்சேரி : புதுச்சேரி, சேவா பாரத் சங்கம் சார்பில் முதியோர் கல்வி திட்டம் துவக்க விழா மூலக்குளத்தில் நடந்தது.ஹைதராபாத்தை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் சேவா பாரத் இயக்கம் பல்வேறு சமூகப் பணிகளைச் செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சேவா பாரத் சங்க புதுச்சேரி கிளை ஒருங்கிணைப்பாளர் அருள்ராஜ் தலைமை தாங்கினார். மார்ட்டின் ராஜ் வரவேற்றார்.தாகூர் அரசு கலை அறிவியல் கல்லுாரி பேராசிரியர் கண்ணன் கலந்து கொண்டு முதியோர் கல்வித் திட்டத்தை துவக்கி வைத்தார். இதில், முதியோர் கல்வியைப் போதிக்கும் ஆசிரியர்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, கற்பித்தல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.மையத்தின் பொறுப்பாளர் சாந்தசெல்வி நன்றி கூறினார். தொடர்ந்து, வினோபா நகர்,சேந்தநத்தம், வம்புப்பட்டு,துத்திப்பட்டு ஆகிய பகுதிகளிலும்கற்பித்தல் பணி துவங்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ