மூத்த குடிமக்கள் ஒன்று கூடல் நிகழ்ச்சி
புதுச்சேரி: பாண்டிச்சேரி மூத்த குடிமக்கள் நல வாழ்வு சங்கம் சார்பில், ஒன்று கூடல் நிகழ்ச்சி நடந்தது. கருவடிக்குப்பம், தனியார் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், சங்க தலைவர் வேணுகோபால் துவக்கி வைத்தார். கவுரவ தலைவர் தேவநாதன் முன்னிலை வகித்தார். இதில், நகைச்சுவை, பேச்சு, பாட்டு, நடனம், விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. நடுவராக சுஜாதா மற்றும் அமுதா கலந்து கொண்டு, போட்டியாளர்களை தேர்வு, செய்தனர். வெற்றிப்பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், சங்க செயலாளர் செல்வராஜ், பொருளாளர் ராமலிங்கம், செயலாளர் கிருஷ்ணராஜ், செயற்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.