உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மயக்க மருந்து தினத்தையொட்டி தொடர் மருத்துவ கருத்தரங்கம்

மயக்க மருந்து தினத்தையொட்டி தொடர் மருத்துவ கருத்தரங்கம்

புதுச்சேரி: இந்திராகாந்தி அரசு மருத்துவமனை மற்றும் பட்ட மேற்படிப்பு நிறுவனத்தில் மயக்க மருந்து தினத்தையொட்டி தொடர் மருத்துவ கருத்தரங்கம் நடந்தது.மருத்துவ கண்காணிப்பாளர் செவ்வேள் தலைமை தாங்கி, துவக்கி வைத்தார். கிருமாம்பாக்கம் மகாத்மா காந்தி மருத்துவக் கல்லுாரி மயக்கவியல் துறை டாக்டர் பார்த்தசாரதி கலந்துரையாடி சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார்.உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி ஷமிமுனிஸா பேகம், மக்கள் தொடர்பு அதிகாரி ஆத்மநாதன், குறை தீர்வு அதிகாரி ரவி, அனைத்து துறை மருத்துவ அதிகாரிகள், முதுநிலை மாணவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மயக்கவியல் துறை டாக்டர் மதன் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை