உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பாலியல் தொல்லை டிரைவர் கைது

பாலியல் தொல்லை டிரைவர் கைது

அரியாங்குப்பம்: ஆட்டோவில் சென்ற பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த, டிரைவரை போலீசார் கைது செய்தனர். தவளக்குப்பத்தை சேர்ந்தவர் பாலமுரளி, 29; சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார். அரசு பள்ளியில் படிக்கும் 17 வயது மாணவி ஒருவர், நேற்று முன்தினம், ஆட்டோவில் ஏறி வீட்டிற்கு சென்றார். ஆட்டோவை, ஓட்டிய பாலமுரளி, மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார். இதுபற்றி, அந்த மாணவி தனது பெற்றோரிடம் கூறினார். இதுகுறித்த புகாரின் பேரில், தவளக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் ஜெயகுருநாதன் போக்சோ பிரிவில் வழக்கு பதிந்து, பாலமுரளியை கைது செய்து, கோர்ட்டில், ஆஜர்ப்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை