உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சங்கர்ஸ் வித்யாலயா பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

சங்கர்ஸ் வித்யாலயா பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

வில்லியனுார்: வில்லியனுார் சங்கர்ஸ் வித்யாலயா மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.சங்கர்ஸ் வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 தேர்வு எழுதிய 80 மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். மாணவி கிருத்திகா 593 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றார். மாணவி பிரியா 588 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தையும், மாணவர்கள் பிரவீனா, கார்த்திக்ராஜ் ஆகியோர் 569 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடத்தையும், மாணவி சுருதி 560 மதிப்பெண் பெற்று நான்காம் இடத்தையும்,மாணவி அம்சவள்ளி 557 மதிப்பெண் பெற்று ஐந்தாம் இடத்தையும் பிடித்து சாதனை படைத்தனர்.550க்கு மேல் 11 மாணவர்கள், 500க்கு மேல் 18 மாணவர்கள் மதிப்பெண் எடுத்துள்ளனர். தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.பள்ளியில் உயிரியல் பாடத்தில் 2 மாணவர்களும், கணினி பயன்பாடு பாடத்தில் 2 பேர், கணக்கு பதிவியல் பாடத்தில் ஒருவரும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.சாதனை படைத்த மாணவர்களை சங்கர்ஸ் கல்வி குழும தலைவி சத்தியகுமாரி கோவிந்தராஜன், பள்ளி முதல்வர்சுகந்தி,துணை முதல்வர் அஸ்வனியா,பெற்றோர் ஆசிரியர் சங்க ஒருங்கிணைப்பாளர் சரஸ்வதி, நிர்வாக மேலாளர் சுந்தரகணேஷ், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் சரவணன் மற்றும் சங்கரன் ஆகியோர் சால்வை அணிவித்து பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை