உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  சிமென்ட் சாலை அமைக்க சிவா எம்.எல்.ஏ., பூமி பூஜை

 சிமென்ட் சாலை அமைக்க சிவா எம்.எல்.ஏ., பூமி பூஜை

வில்லியனுார்: வில்லியனுார் எஸ்.எஸ். நகரில் கழிவுநீர் வாய்க்கால் வசதியுடன் புதிய சிமென்ட் சாலை அமைக்கும் பணியை சிவா எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். வில்லியனுார் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில், ரூ. 59:50 லட்சம் திட்ட மதிப்பில் எஸ்.எஸ்., நகர் பகுதியில் உள்ள முக்கிய வீதிகளுக்கு கழிவுநீர் வாய்க்கால் வசதியுடன் சிமென்ட் சாலை அமைக்கும் பணியை சிவா எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் வில்லியனுார் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் பிரபாகரன், உதவிப் பொறியாளர் சத்தியநாராயணான் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் அன்பு, ஜெயபால், கல்யாணம், சிவகுமார், முருகன், நாகராஜ், முருகேசன், பெருமாள், பரசுராமன், செந்தமிழ்செல்வன், ரமேஷ், கணேசன், கல்யாணசுந்தரம், ராமானுஜம், தி.மு.க., நிர்வாகி மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை