உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  புதுச்சேரியில் சித்தர்கள் மாநாடு மார்ச் 1ம் தேதி நடக்கிறது

 புதுச்சேரியில் சித்தர்கள் மாநாடு மார்ச் 1ம் தேதி நடக்கிறது

புதுச்சேரி: மன அமைதிக்கான ஆன்மிக மையம், அகில பாரத இந்து மகாசபையின் புதுச்சேரி கிளை மற்றும் அகில உலக ஆன்மிகப் பேரவை சார்பில்,வரும் மார்ச் 1ம் தேதி, புதுச்சேரியில் சித்தர்கள் மாநாடு மற்றும் அசுவமேத யாகம் நடக்கிறது. முருங்கப்பாக்கம் திரவு பதி அம்மன் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட மந்தக்கரையில்நடக்கும் மாநாட்டிற்குஅகில உலக ஆன்மிகப் பேரவை நிறுவனர் தெய்வசிகாமணி சுவாமி த லைமை தாங்குகிறார். அகில பாரத இந்து மகா சபா புதுச்சேரி தலைவர் மணிவண்ணன் முன்னிலைவகிக்கிறார். மாநாட்டில்,ஆதினங்கள், ஜீயர்கள், மடாதிபதிகள், பீடாதிபதிகள், சாதுக்கள், சன்னியாசிகள் மற்றும் துறவிகள் பங்கேற்கின்றனர். தொடர்ந்து உலகில் சமாதானம் மற்றும் அமைதி நிலவ வேண்டிஅசுவமேத யாகம் நடக்கிறது.இந்த யாக வேள்வியில் பங்கேற்க விரும்புவோர் ரூ.501 செ லுத்தி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். இத்தகவலை அகில பாரத இந்து மகா சபா புதுச்சேரி மாநில பொதுச் செயலாளர் பெருமாள் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை