உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  தமிழ் சங்கத்தில் சிலப்பதிகார விழா

 தமிழ் சங்கத்தில் சிலப்பதிகார விழா

புதுச்சேரி: புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தில் சிலப்பதிகார விழா, சங்கத் தலைவர் முத்து தலைமையில் நடந்தது. செயலர் சீனு மோகன்தாசு வரவேற்றார். துணைத் தலைவர்கள் திருநாவுக்கரசு, பொருளர் அருள்செல்வம், துணைச் செயலர் தினகரன் முன்னிலை வகித்தனர். விழாவில் மயூரி சித்திர நாட்டியாலயாவின் முருகன் குழுவினரின் 'சிலப்பதிகார நாட்டிய நாடகம்' நடந்தது. தமிழ்மணி எழுதிய 'வாரணம் ஆயிரம்' எனும் நுாலினை தலைவர் முத்து வெளியிட முருகன் பெற்றுக் கொண் டார். உலகத் தமிழர் பேரமைப்பின் பொதுச்செயலாளர் தமிழ்மணி 'சீரார் சிலம்பு' எனும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். ஆறு செல்வன் தலைமையில் 'சிலம்பில் பரல்கள்' எனும் தலைப்பில் கவியரங்கம் நடந்தது. அதில், கவிதை வாசித்த அனைத்து கவிஞர்களுக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. பேராசிரியர் ஆனந்த வடிவேலு, ஆட்சிக்குழு உறு ப்பினர்கள் ராஜா, சுரேஷ்குமார், சிவேந்திரன், ஆனந்தராசன், பாலசுப்ரமணியன், பாரதி, இளங்கோ, கலாம் விதைகள் இயக்க ராஜா, ரேகா, இளங்கோவன் உட்பட பலர் கலந்துகொண்டனர் . உசேன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ