உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  சகோதரி இறந்த துக்கம் சகோதரர் தற்கொலை

 சகோதரி இறந்த துக்கம் சகோதரர் தற்கொலை

புதுச்சேரி: சகோதரி இறந்த துக்கத்தில் சகோதரர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சண்முகாபுரம், வி.பி.சிங்., நகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன், 60. இவரது சகோதரி கடந்த இரு வாரத்திற்கு முன் இறந்துவிட்டார். இந்நிலையில் மன வருத்தத்தில் இருந்தவர், குடித்து விட்டு அக்காவே இறந்துவிட்டார் நான் ஏன் உயிரோடு இருக்க வேண்டும் என கூறி, புலம்பினார். அவரது மனைவி அவருக்கு ஆறுதல் கூறிவந்த நிலையில், நேற்று முன்தினம் காலை வீட்டின் படிக்கட்டு மணிக்கூண்டில் துாக்கில் தொங்கினார். ராமசந்திரனை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்து, அவர் இறந்ததை உறுதி செய்தனர். புகாரின் பேரில், மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை