உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசு மகளிர் கல்லுாரியில் திறன் மேம்பாட்டு பயிற்சி

அரசு மகளிர் கல்லுாரியில் திறன் மேம்பாட்டு பயிற்சி

புதுச்சேரி : காரைக்கால் மாவட்டம், காரைக்கால்மேடு அரசு மகளிர் தொழில்நுட்ப கல்லுாரியில் 'சென்சார்ஸ் அண்டு டெக்னாலாஜிக்கல் இனோவேஷன்' தலைப்பில் அட் வான்சுடு திறன் மேம்பாட்டு செய்முறை பயிற்சி நடந்தது. காமராஜர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி, பயோமெடிக்கல் இன்ஜினியரிங் துறை தலைவர் சதீஷ்குமார் தலைமை தாங்கி, பயிற்சியின் நோக்கம் பற்றி கூறியதோடு, மாணவர்கள் செய்முறை திறன்களை தற்போதுள்ள நவீன போட்டி உலகிற்கு ஏற்றவாறு சிறப்பாக வளர்த்து கொள்ள வேண்டும் என கூறினார். தொடர்ந்து அவர், மாணவர்களுக்கு அட்வான்சுடு திறன் மேம்பாட்டு செய்முறை பயிற்சி நடத்தினார். இதில் மாணவ, மாணவிகள் பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ஆய்வக பயிற்றுவிப்பாளர்கள் புனிதவதி, சங்கீதா, ஒருங்கிணைப்பாளர் விமலன் ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை