கூவம் போல் நாறும் தேங்காய்த்திட்டு வாய்க்கால்
மாற்றுத்திட்டம் எப்போது?ஊசுட்டேரியில் இருந்து வரும் உபரி நீர் வெளியேறும் பள்ள வாய்க்கால் மூலக்குளம் வழியாக, ஜான்சி நகர், முதலியார்பேட்டை, புவன்கரே வீதி வழியாக மரப்பாலம் அடைந்து அங்கிருந்து தேங்காய்த்திட்டு, உப்பளம் வழியாக கடலில் கலக்கிறது.ஏரி நீர் மற்றும் மழைநீர் வடிய உருவான வடிகால் வாய்க்கால் தற்போது மெகா கழிவுநீர் வாய்க்காலாக மாறிவிட்டது. புதுச்சேரி முழுதும் பாதாள சாக்கடை இணைப்பு கொடுத்தும், தினசரி பல லட்சம் லிட்டர் கழிவுநீர் இந்த வாய்க்கால்கள் வழியாக கடலுக்கு செல்வது குறிப்பிடதக்கது.மரப்பாலத்தில் இருந்து தேங்காய்த்திட்டு வழியாக உப்பளம் கடந்து கடலுக்கு செல்லும் இந்த வாய்க்கால் ஒட்டுமொத்த கழிவுநீர் செல்லும், 'கூவம் ஆறு' போல் உள்ளது. சேறும் சகதியும் நிறைந்து கடும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசு உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. வாய்க்காலை சுற்றி வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் துர்நாற்றம், சுகாதார சீர்கேட்டால் பல்வேறு வியாதிகளுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே, தேங்காய்த்திட்டு கழிவுநீர் வாய்க்காலை சுத்தம் செய்ய மாற்று திட்டத்தை அரசு உருவாக்க வேண்டும்.