மேலும் செய்திகள்
திருச்செந்துாரில் திடீர் கடல் அரிப்பு
27-Nov-2024
பாகூர் : கடல் சீற்றத்தால் பனித்திட்டு, நரம்பை, மூ.புதுக்குப்பம் உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு, கடல் நீர் ஊருக்குள் புகும் அபாயம் உள்ளது.வங்க கடலில் உருவாகி உள்ள பெங்கல் புயல் காரணமாக புதுச்சேரியில் பரவலாக கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கடல் அலையின் சீற்றம் அதிகமாக இருந்து வருகிறது. மீனவர்கள் தங்களது படகுகள், வலை உள்ளிட்ட மீன் பிடி உபகரணங்களை பாதுகாப்பான இடத்தில் வைத்துள்ளனர்.கிருமாம்பாக்கம் அடுத்த நரம்பை, பனித்திட்டு, மூ.புதுக்குப்பம் உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் ் 10 மீட்டர் நீளத்திற்கு மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. அலையின் சீற்றம் அதிகரித்தால் கடல் நீர் ஊருக்குள் புகும் அபாயம் உள்ளது. பாகூர் தாசில்தார் கோபாலக்கிருஷ்ணன் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் கடற்கரை கிராமங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை பணிகளை ஆய்வு செய்தனர்.
27-Nov-2024