உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  தொழிலாளர் காப்பீட்டு கழகத்தில் சமூக பாதுகாப்பு குறியீடு

 தொழிலாளர் காப்பீட்டு கழகத்தில் சமூக பாதுகாப்பு குறியீடு

புதுச்சேரி: தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகத்தில், சமூக பாதுகாப்பு குறியீடு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, புதுச்சேரி தொழிலாளர் அரசு காப்பீட்டு கழக, மண்டல இயக்குனர் அலுவலக செய்திகுறிப்பு: இந்திய அரசு சமூக பாதுகாப்பு குறியீடு, கடந்த மாதம் 21ம் தேதி முதல் அமல்படுத்தியுள்ளது. இதன் மூலம் தொழிலாளர் காப்பீட்டுக்கழகம் தொடர்பாக, முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தில், பல தொழிலாளர்களை இணைத்து, சமூக பாதுகாப்பு வழங்குதல், நடைமுறைகளை எளிமைப்படுத்துதல் மற்றும் பலன்களை காலதாமதமின்றி வழங்குதல் ஆகியவை உறுதி செய்யப்படுகின்றன. இதில், 10 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றும் அனைத்து நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசு அறிவித்துள்ள ஆபத்தான அல்லது உயிருக்கு ஆபத்தான பணிகளில் ஈடுபடும் நிறுவனங்கள் பயன்பெறலாம். சமூக பாதுகாப்பு குறியீட்டில் வரும் அனைத்து தகுதியான ஊழியர்களையும் காப்பீட்டில் பதிவு செய்து உறுதி செய்து கொள்ளலாம். மேலும், 0413 - 2357642 தொலைபேசியிலும், esic.gov.inமின்னஞ்சலில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ