மேலும் செய்திகள்
மண்புழு வளர்ப்பு பயிலரங்கம்
14-Oct-2026
வேளாண் இன்ஜினியரிங் மாணவர்களுக்கு பயிற்சி
27-Oct-2026
புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான செறிவூட்டப்பட்ட சூரிய வெப்ப ஆற்றல் குறித்த இருநாள் தொழில்நுட்பப் பயிலரங்கம் துவங்கியது. பேராசிரியர் அருண் பிரசாத் வரவேற்றார். புதைபடிவ எரிபொருட்களை சார்ந்திருப்பதை குறைத்து, இந்தியாவின் 2070-ம் ஆண்டுக்கான நெட்-ஜீரோ இலக்கை அடைய செறிவூட்டப்பட்ட சூரிய வெப்ப ஆற்றல் தொழில்நுட்பங்கள் முக்கிய பங்கு வகிக்கும் என்று அவர் தனது உரையில் குறிப்பிட்டார். சூரிய ஆற்றல் தொழில்நுட்ப சல்யூஷன்ஸ் இந்தியாவின் இயக்குநர் திவிபென் போருவா, மதன்ஜீத் பசுமை ஆற்றல் தொழில்நுட்பப் பள்ளியின் முதல்வர் ஜாபர் அலி, பசுமை ஆற்றல் தொழில்நுட்பத் துறையின் தலைவர் பிரசாந்த், புதுச்சேரி பல்கலைக்கழக இயக்குநர் தரணிக்கரசு சிறப்புரையாற்றினர். செறிவூட்டப்பட்ட சூரிய ஆற்றல் தொழில்நுட்ப வடிவமைப்பு, பொருளாதார பயன்கள், பாதுகாப்பு தரநிலைகள் மற்றும் இயக்கம் குறித்து விளக்கப்பட்டது.
14-Oct-2026
27-Oct-2026