சூரிய ஒளி மின் நிலையம்: விழிப்புணர்வு முகாம்
புதுச்சேரி : வீட்டு மேற்கூரையில், சூரிய ஒளி மின் நிலையம் அமைப்பது தொடர்பான விழிப்புணர்வு முகாம், கிருமாம்பாக்கம் தனியார் திருமண நிலையத்தில், நாளை நடக்கிறது.மின்துறை கண்காணிப்பு பொறியாளர் ராஜேஷ் சன்யால் செய்திக்குறிப்பு:புதுச்சேரி மின்துறை மற்றும் புதுப்பிக்கத் தக்க எரிசக்தி முகமை இணைந்து, இலவச மின்சார திட்டத்தின் கீழ், வீடுகளின் மேற்கூரையில், சூரிய ஒளி மின் நிலையம் அமைப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கிருமாம்பாக்கம் ஆர்.கே. அன்னை அபிராமி திருமண நிலையத்தில் நாளை 17ம் தேதி, காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை, விழிப்புணர்வு முகாம் நடக்கிறது.இத்திட்டத்தின் மூலம், சூரிய மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கு, 1 கே.வி.க்கு 30 ஆயிரம், 2 கே.வி.க்கு 60 ஆயிரம், 3 கே.வி.,க்கு 78 ஆயிரம் ரூபாய் மானியத்தை மத்திய அரசு வழங்குகிறது. இத்திட்டம் தொடர்பாக 9489080373, 9489080374 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளவும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.