உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கரிக்கலாம்பாக்கத்தில் சூரசம்ஹாரம்

கரிக்கலாம்பாக்கத்தில் சூரசம்ஹாரம்

நெட்டப்பாக்கம் : கரிக்கலாம்பாக்கம் குமரேஸ்வரர் கோவிலில் நாளை மாலை சூரசம்ஹாரம் நடக்கிறது.நெட்டப்பாக்கம் அடுத்த கரிக்கலாம்பாக்கம் வள்ளி தேவசனோ சமேத குமரேஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா கடந்த 2ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. இதையொட்டி, தினமும் சுவாமிக்கு காலை சிறப்பு அபி ேஷக ஆராதனைகளும், இரவு சுவாமி வீதியுலா நடந்து வருகிறது. இன்று மாலை 6:30 மணிக்கு குமரேஸ்வர் சுவாமி, அம்மனிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சியும், நாளை மாலை சூரசம்ஹாரம் நடக்கிறது. 8ம் தேதி இரவு திருக்கல்யாண உற்சவமும், 10ம் தேதி காலை ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை