உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நெட்டப்பாக்கத்தில் சூரசம்ஹாரம்

நெட்டப்பாக்கத்தில் சூரசம்ஹாரம்

நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் செல்வமுத்துக்குமார சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் நடந்தது. நெட்டப்பாக்கம் பர்வதவர்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவிலில் உள்ள வள்ளி தேவசேனா சமேத செல்வமுத்துக் குமார சுவாமிக்கு கந்தசஷ்டி பெருவிழா கடந்த 22ம் தேதி கணபதி பூஜையுடன் துவங்கியது. தினமும் காலை அபிஷேக ஆராதனை, சுவாமி வீதியுலா நடந்தது. நேற்று முன்தினம் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடந்தது. துணை சபாநாயகர் ராஜவேலு உட்பட பல ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் . நேற்றிரவு திருக்கல்யாணம் உற்சவம், பஞ்சமூர்த்தி வீதியுலா நடந்தது. இன்று (29ம் தேதி) மஞ்சள் நீர் உற்சவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ