திருக்காஞ்சி கோவிலில் 27ம் தேதி சூரசம்ஹாரம்
புதுச்சேரி: திருக்காஞ்சி கெங்கவராக நதீஸ்வரர் கோவிலில் கந்தசஷ்டி சூரசம்ஹார விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமிக்கு காலை சிறப்பு அபி ேஷக ஆராதனை, இரவு சுவாமி வீதியுலா நடக்கிறது. வரும் 26ம் தேதி இரவு 8:00 மணிக்கு வேல் வாங்குதல் நிகழ்ச்சி, 27ம் தேதி மாலை 6:00 மணிக்கு சூரசம்ஹார விழா நடக்கிறது. 28ம் தேதி இரவு 7:00 மணிக்கு வள்ளி தெய்வானை முருகப்பெருமான் திருக்கல்யாணம் நடக்கிறது. 29 ம் தேதி இரவு 7:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.