உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பாலியல் வழக்கில் சிக்கிய எஸ்.பி.,க்கு முன் ஜாமின்

பாலியல் வழக்கில் சிக்கிய எஸ்.பி.,க்கு முன் ஜாமின்

காரைக்கால்: காரைக்காலில் பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்ட எஸ்.பி.,க்கு நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கி உள்ளது. காரைக்கால் மாவட்டத்தில், சுப்ரமணியன் எஸ்.பி.,யாக பணியாற்றியபோது, 28 வயது பெண் போலீசுடன் பழக்கம் ஏற்பட்டது. சுப்ரமணியன் புதுச்சேரிக்கு மாற்றலாகி வந்தபின்னரும் பெண் போலீசிடம் வீடியோ அழைப்புகளில் பேசி வந்தார். இது பெண் போலீசின் கணவருக்கு தெரியவந்து, சீனியர் எஸ்.பி.,யிடம் புகார் அளித்தார். இதையடுத்து,விசாரணைக்குழு அமைப்பட்டு, சுப்ரமணியன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சென்னை ஐகோர்ட் உத்தரவின் பேரில், நகர போலீசார் கடந்த செப்., 29ம் தேதி எஸ்.பி., சுப்ரமணியன் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்தனர். வழக்கு பதிவு செய்யப்பட்டு இதுவரை சுப்ரமணியனை கைது செய்ய முடியாமல் போலீசார் திணறி வந்தனர். இதனிடையே பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள எஸ்.பி., சுப்ரமணியன் முன்ஜாமின் பெற நீதிமன்றத்தை நாடினார். எஸ்.பி., சுப்ரமணியனுக்கு நேற்று முன்தினம் சென்னை ஐகோர்ட் முன்ஜாமீன் வழங்கியுள்ளது. இதனிடையே இவர், காரைக்கால் நீதிமன்றத்தில் ஓரிரு நாட்களில் ஆஜர் ஆவார் என, எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை