உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நுாறு நாள் வேலை பணி சபாநாயகர் துவக்கி வைப்பு

நுாறு நாள் வேலை பணி சபாநாயகர் துவக்கி வைப்பு

அரியாங்குப்பம்: மணவெளி தொகுதியில் மூன்று இடங்களில், 47.77 லட்சம் மதிப்பில் நுாறு நாட்கள் வேலைதிட்ட பணியை, சபாநாயகர் செல்வம் துவக்கி வைத்தார்.தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் மூலம், புதுச்சேரியில்நுாறு நாட்கள் வேலை திட்ட பணிநடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மணவெளி தொகுதி, தவளக்குப்பம் அடுத்த டி.என்., பாளையம் மலட்டாறு மதகு முதல் நாவப்பனுார் வரை, கரை பலப்படுத்த 20 லட்சம் மதிப்பீட்டில் பணியை சபாநாயகர் செல்வம்நேற்று துவக்கி வைத்தார்.தொடர்ந்து, சங்கராபரணி ஆற்றங்கரையை வலுப்படுத்த, 25.28 லட்சம் மதிப்பில் பணி, நோணாங்குப்பம் டோல்கேட் அருகில் உள்ள எரா குட்டையை துார்வாரி ஆழப்படுத்த 2.49 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணியை, சபாநாயகர் துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, செயற் பொறியாளர் சீனுவாசன், உதவி பொறியாளர் ராமன் உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை