உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கோவில் திருப்பணிக்கு நிதி சபாநாயகர் வழங்கல்

கோவில் திருப்பணிக்கு நிதி சபாநாயகர் வழங்கல்

புதுச்சேரி: உப்பளம் தொகுதி அவ்வை நகர் முத்துமாரியம்மன் கோவில், திருப்பணிக்கு முதல் தவனை தொகைக்கான காசோலையை, தற்காலிக சபாநாயகர் அன்பழகன், திருப்பணி குழுவினரிடம் வழங்கினார். உப்பளம் தொகுதி அம்பேத்கர் சாலை, அவ்வை நகரில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில், திருப்பணிக்கு முதல் தவணை தொகையாக வழங்கும் நிகழ்ச்சி சட்டசபையில் நடந்தது. தற்காலிக சபாநாயகர் அன்பழகன் ரூ. 3.75 லட்சத்திற்கான காசோலையை கோவில் திருப்பணி நிர்வாக குழு தலைவர் செங்கேணி, செயலாளர் கோதண்டபாணி, பொருளாளர் ராஜன்பாபு, சாமிவேல், வழக்கறிஞர் கோபி, குணாளன், பாக்யராஜ் ஆகியோரிடம் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை