உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  பாகூரில் சிறப்பு துப்புரவு பணி

 பாகூரில் சிறப்பு துப்புரவு பணி

பாகூர்: பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில், சிறப்பு துப்புறவு முகாம் நடந்தது. பாகூரில் நடந்த முகாமினை, ஆணையர் சதாசிவம் துவக்கி வைத்தார். பாகூர் கடைவீதி, மருத்துவமனை வீதி உள்ளிட்ட இடங்களில் இருந்த குப்பைகள் அகற்றும்பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். ஆணையர் சதாசிவம், பொது மக்களிடம் குப்பை களை தரம் பிரித்து கொடுக்க வேண்டும். வீதிகளில் குப்பைகளை கொட்டாமல், துப்புறவு பணியாளர்களிடம் அவற்றை வழங்கிட வேண்டும் என, கேட்டுக்கொண்டார். மேலும், அவர், பாகூரில் உள்ள வணிகர்களிடம், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை மற்றும் தடைகள் குறித்து விளக்கி, அது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தினார். கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள், ஊழியர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி