உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  சிறப்பு மருத்துவ முகாம்

 சிறப்பு மருத்துவ முகாம்

நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் துப்புரவு தொழிலாளர்களுக்கு சிறப்பு முருத்துவ முகாம் பஞ்சாயத்து அலுவகத்தில் நேற்று நடந்தது. மருத்துவ முகாமினை கொம்யூன் பஞ்., ஆணையர் ரமேஷ் துவக்கி வைத்து பேசினார். முகாமில் நெட்டப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவ அதிகாரி மொகந்தி தலைமையிலான மருத்துவ குழுவினர் துப்புரவு தொழிலாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது. முகாமில் துப்புரவு தொழிலாளர்களுக்கு ஆயுஸ்மான்காப்பீட்டு திட்டம் பதிவு செய்யமால் இருந்த துப்புரவு பணியாளர்களுக்கு காப்பீடு திட்டம் பதிவு செய்து தரப்பட்டது. முகாமில் பஞ்., ஊழியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் கலந்து கொண்டனர். பஞ்., நோடல் அதிகாரி பிரபாகரன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி