சீரடி மகாராஜா சாய் கோவிலில் புத்தாண்டு சிறப்பு பூஜை
புதுச்சேரி: ரெட்டியார்பாளையம், அரும்பார்த்தபுரம் புதிய பைபாஸ் சாலையில் அமைந்துள்ள சீரடி மகாராஜா சாய் கோவிலில் புத்தாண்டு சிறப்பு பூஜை நேற்று நடந்தது. நேற்று காலை, விக்னேஸ்வர பூஜை மற்றும் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து விநாயகர், முருகர் மற்றும் மகாராஜா சாய் பாபா சுவாமிகளுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு சேவை சாதித்தனர். சுவாமிக்கு 1,008 சாய் அஷ்டோத்திரம், சாய் பாபா சிறப்பு பல்லாக்கு ஊர்வலம் நடந்தது. மதியம், மாலை மற்றும் இரவு ஆரத்தி நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல், பிள்ளைச்சாவடி சீரடி சாய்பாபா பிரார்த்தனை மண்டபத்தில் நேற்று காலை கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து, சிறப்பு அபிேஷகம் மற்றும் பாபா பல்லக்கு உற்சவம், ஆரத்தி நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.