உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஜி.எஸ்.டி., இல்லா திட்டங்களுக்கான சிறப்பு பதிவு முகாம் இன்று துவக்கம்

ஜி.எஸ்.டி., இல்லா திட்டங்களுக்கான சிறப்பு பதிவு முகாம் இன்று துவக்கம்

புதுச்சேரி : புதுச்சேரி அஞ்சல் துறையில் ஜி.எஸ்.டி., இல்லா திட்டங்களுக்கான சிறப்பு இருவார பதிவு முகாம் இன்று முதல் துவங்குகிறது. புதுச்சேரி முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் இனகொல்லு காவியா செய்திக்குறிப்பு: அஞ்சல்துறையில் இந்தியா போஸ்ட் பேண்ட்ஸ் பேங்க் (ஐ.பி.பி.பீ) புதுச்சேரி கிளையில் பொதுமக்களுக்கு பாதுகாப்பான வாழ்க்கைக்கும், எதிர்கால சேமிப்புக்கும் பல்வேறு திட்டங்கள் உள்ளன. இவற்றை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் விதமாக ஜி.எஸ்.டி., இல்லா திட்டங்களுக்கான இருவார சிறப்பு பதிவு முகாம் இன்று 8ம் தேதி முதல் வரும் 22ம் தேதி வரை நடக்கிறது. ஜி.எஸ்.டி., கவுன்சில் தனி நபர் மருத்துவ காப்பீடு மற்றும் லைப் இன்சூரன்சிற்கு ஜி.எஸ்.டி., இல்லை என அறிவித்துள்ளது. ஐ.பி.பி.பீ., தனது இணைப்பு நிறுவனங்கள் மூலமாக ஜி.எஸ்.டி., இல்லாத மருத்துவ காப்பீடு மற்றும் லைப் இன்சூரன்சை பொதுமக்கள் விரும்பும் விதமாக அவர்களுக்கு ஏற்ற திட்டங்களை வழங்க உள்ளது. இதன்மூலம் குழந்தைகளின் எதிர்கால கனவு, புதுமண தம்பதிகளின் எதிர்காலத்திற்கான சேமிப்பு, புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான திட்டங்கள், சிறிது சிறிதாக சேமிக்க வேண்டும் என, விரும்புபோருக்கு தனித்தனி திட்டங்கள் உள்ளன. எனவே, பொதுமக்கள் போலி நிறுவனங்களை நம்பி ஏமாறாமல் அஞ்சல் துறையின் 'ஐபிபிபீ'ல் பாதுகாப்பான, நம்பிக்கையான, நல்ல லாபம் தரக்கடிய திட்டங்கள் தேர்வு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு தலைமை அஞ்சல் அலுவலகம் உள்ளிட்ட அனைத்து அஞ்சலகங்களையும் அணுகலாம். அல்லது 99520 53573 என்ற மொபைல் எண்ணில் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி புதுச்சேரி கிளை மேலாளரை தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி