உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பனைமரம் குறித்த சிறப்பு கருத்தரங்கம்

பனைமரம் குறித்த சிறப்பு கருத்தரங்கம்

புதுச்சேரி, : கணுவாப்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் சங்கம் சார்பில் பனைமரம் குறித்த சிறப்பு கருத்தரங்கம், புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியர் திருவரசன் தலைமை தாங்கினார். பட்டதாரி ஆசிரியர் தணிகாசலம் வரவேற்றார். பட்டதாரி ஆசிரியை திருமங்கை நோக்கவுரை ஆற்றினார்.தனசுந்தராம்பாள் சாரிடெபிள் சொசைட்டி நிறுவனர் ஆனந்தன் கலந்து கொண்டு, பனைமரத்தின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளித்தார். ஆசிரியர் சரவணன் புகையிலை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.ஆசிரியர் புவனராஜா நன்றி கூறினார். ஆசிரியை நிர்மலா தொகுத்து வழங்கினார்.இதில், ஆசிரியர்கள் இளஞ்செழியன், ரோவிலர் பெரோசியா, பத்மாவதி சத்யா, புனிதவதி, கலைவாணி, சுபத்ராதேவி, சாருமதி, பவானி, குமுதா, சுமதி, யாமினி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.தொடர்ந்து, சங்கராபரணி ஆற்றங்கரையோரம் 100க்கும் மேற்பட்ட பனை விதைகள் நடப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி