உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சனிக்கிழமை சிறப்பு வழிபாடு

சனிக்கிழமை சிறப்பு வழிபாடு

திருக்கனுார் : செட்டிப்பட்டு வரதராஜப் பெருமாள் கோவிலில், புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடந்தது. திருக்கனுார் அடுத்த செட்டிப்பட்டு கிராமத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி, சுவாமிக்கு திருப்பள்ளி எழுச்சியும், சிறப்பு திருஞ்சனம் நடந்தது. இரவு சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி