மேலும் செய்திகள்
பி.டி.ஓ.,க்கள் பணியிட மாற்றம்
09-Oct-2024
வில்லியனுார் : வில்லியனுாரில் மகளிர் சுய உதவிக்குழு உற்பத்தி பொருட்கள் விற்பனை அங்காடியை எதிர்க்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.புதுச்சேரி அரசு ஊரக வளர்ச்சி முகமை மற்றும் வில்லியனுார் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுவினரின் உற்பத்தி பொருட்களை நுகர்வோர்களிடம் நேரடியாக விற்பனை செய்யும் வகையில் லட்சுமி திருமண நிலையத்தில் தீபாவளி அங்காடி மற்றும் கிராம சந்தை திறப்பு விழா நடந்தது.வட்டார வளர்ச்சி அதிகாரி கார்த்திகேசன் தலைமை தாங்கினார். துணை வட்டார வளர்ச்சி அதிகாரி கலைமதி வரவேற்றார். எதிர்க்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ., தீபாவளி அங்காடியை திறந்து,விற்பனையை துவக்கி வைத்தார்.இதில், மகளிர் சுய உதவிக்குழுவினர் உற்பத்தி பொருட்களை விற்பனைக்கு வைத்துள்ளனர். நிகழ்ச்சியில் வில்லியனுார் வளர்ச்சி அலுவலக ஊழியர்கள், கிராம சேவக்,கூட்டமைப்பின் பொறுப்பாளர்கள், பணியாளர்கள் மற்றும் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
09-Oct-2024