என்.டி.எஸ்., பள்ளியில் விளையாட்டு தின விழா
புதுச்சேரி: புதுச்சேரி லெனின் வீதியில் உள்ள என்.டி.எஸ். உயர்நிலைப் பள்ளியின் 9ம் ஆண்டு விளையாட்டு தினம் மற்றும் பரிசளிப்பு விழா கோரிமேடு காவலர் விளையாட்டு திடலில் நடந்தது. பள்ளி சேர்மன் சம்பத் தலைமை தாங்கினார். ஆசிரியை ஆர்த்தி வரவேற்றார். பள்ளி முதல்வர் கொல்பர் ஆண்டறிக்கை வாசித்தார். துணை சேர்மன் பத்மினி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக போக்குவரத்து எஸ்.பி., ரட்சனாசிங், யூகோ வங்கி புதுச்சேரி கிளை துணை பொது மேலாளர் ராகுல்குமார் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். ஆசிரியை சிவசங்கரி நன்றி கூறினார்.