உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கலிதீர்த்தாள்குப்பம் அரசுப் பள்ளியில் விளையாட்டு பயிற்சி மையம் தேவை

கலிதீர்த்தாள்குப்பம் அரசுப் பள்ளியில் விளையாட்டு பயிற்சி மையம் தேவை

திருபுவனை: கலிதீர்த்தாள்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளி யில், வட்டார அளவிலான விளையாட்டு பயிற்சி மையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.மதகடிப்பட்டு அடுத்த கலிதீர்த்தாள்குப்பம், கருணாநிதி அரசு மேல்நிலைப் பள்ளி பள்ளியில் 10 ஏக்கர் பரப்பளவில் விளையாட்டு மைதானம் அமைந்துள்ளது. இங்கு பள்ளி மாணவ, மாணவிகள் மட்டுமின்றி, சுற்றியுள்ள திருபுவனை, மண்ணாடிப்பட்டு, நெட்டப்பாக்கம், வில்லியனுார், பாகூர் தொகுதி கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள் விளையாட்டு பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.பொது மக்கள் பலர் நடைபயிற்சி மேற்கொள்கின்றனர். இருந்தும் பயிற்சியாளர்கள் இல்லாமல் இப்பகுதி இளைஞர்கள் விளையாட்டில் பெரிய அளிவில் சோபிக்க முடியாமல் உள்ளனர்.எனவே, சுற்றியுள்ள கிராம மக்கள், மாணவ, மாணவிகள், இளைஞர்களின் நலன் கருதி கலிதீர்த்தாள்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில், வட்டார அளவிலான விளையாட்டு பயிற்சி மையம் அமைத்து, அனுபவம் மிக்க பயிற்சியாளர்களை கொண்டு, பயிற்சி அளிக்க புதுச்சேரி பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை