உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புனித ஜான்மரி  வியான்னி ஆலய ஆண்டு விழா

புனித ஜான்மரி  வியான்னி ஆலய ஆண்டு விழா

புதுச்சேரி : ரெயின்போ நகர் புனித ஜான்மரி வியான்னி ஆலயத்தில் ஆண்டு விழா நடந்தது. புதுச்சேரி ரெயின்போ நகர் புனித ஜான்மரி வியான்னி ஆலயத்தில் ஆண்டு விழா பேராலய பங்கு தந்தை ரோசாரியோ தலைமை தாங்கி, புனிதரை தாங்கிய தேரை கொடியேற்றி துவக்கி வைத்தார். தொடர்ந்து கூட்டு திருப்பலி நடைபெற்றது. தினமும் திருத்தேர் பவனி, திருப்பலி நடைபெற்றது. புதுச்சேரி - கடலுார் உயர்மறை மாவட்ட குழந்தைசாமி தலைமையில் கூட்டுத் திருப்பலி நடந்தது. விழாவில் வைத்தியலிங்கம் எம்.பி., கலந்து கொண்டார். தொடர்ந்து புனித ஜான்மரி வியான்னியின் புனிதர் பட்டம் பெற்று நுாறாவது ஆண்டு நிறைவையொட்டி, பிரான்சில் உள்ள புனிதரின் அழியாத உடலின் படத்தை முதன்மை குரு, எம்.பி.,யிடம் கொடுத்தார். ஏற்பாடுகளை பங்குத் தந்தை கிரகோரி லுாயிஸ் ஜோசப் செய்திருந்தார். காமராஜர் நகர் தொகுதி காங்., பொருப்பாளர் தேவதாஸ், காங்., மாநில செயலாளர் வினோத் ஆகியோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை