உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புனித பேட்ரிக் பள்ளி ஆண்டு விழா

புனித பேட்ரிக் பள்ளி ஆண்டு விழா

புதுச்சேரி : புதுச்சேரி புனித பேட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 33ம் ஆண்டு விழா நடந்தது.பள்ளி கலையரங்கில் நடந்த ஆண்டு விழாவில், பள்ளி முதல்வர் அல்போன்ஸ் ஹில்டா வரவேற்றார். பள்ளியின் தாளாளர் பிரடெரிக் ஆண்டறிக்கை வாசித்தார். பள்ளி ஆலோசனை குழு தலைவர் ஜோசப் பால் அடிகளார் முன்னிலை வகித்தார்.அதனை தொடர்ந்து ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு பணிநிறைவு பாராட்டு விழாவில், தேசிய அளவில் நடந்த அவந்திகா போட்டியில் பங்கேற்று பள்ளி சிறப்பிடம் பெற்றமைக்கு பள்ளி தாளார் மற்றும் ஆசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர்.நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக, லட்சுமி நாராயணா மருத்துவ கல்லுாரி , மருத்துவ கண்காணிப்பாளர் , ஆசையா போஸ்கோ சந்திரகுமார், பள்ளியின் முன்னாள் மாணவரும், சென்னை காவேரி மருத்துவமனை நரம்பியல் நிபுணர் அருண்குமார் சிறப்புரையாற்றினர். விழாவில் முதல் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் 60 மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.ஆண்டு விழாவில், பள்ளியின் மருத்துவ இயக்குநர் ஜீத்தா பிரடெரிக், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி