உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஸ்டேட் பேங்க் வீட்டு கடன் திருவிழா இரண்டாவது நாள்: இன்று நடக்கிறது

ஸ்டேட் பேங்க் வீட்டு கடன் திருவிழா இரண்டாவது நாள்: இன்று நடக்கிறது

புதுச்சேரி : புதுச்சேரியில் ஸ்டேட் பேங்க் சார்பில் மாபெரும் வீட்டு கடன் திருவிழா இரண்டாவது நாளாக இன்று (6ம் தேதி) நடக்கிறது. புதுச்சேரி ஸ்டேட் பேங்க் மண்டல அலுவலகம் சார்பில் மாபெரும் வீட்டு கடன் திருவிழா மற்றும் வாடிக்கையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி வேல்சொக்கநாதன் திருமண மண்டபத்தில் நேற்று துவங்கியது. நேற்று நடந்த முகாமை, அபி கிருஷ்ணா குழுமத்தின் உரிமையாளர் செந்தில், ஜெனோ மாறன் குழுமத்தின் உரிமையாளர் மாறன் ஆகியோர் துவக்கி வைத்தனர். புதுச்சேரி கிளை உதவி பொது மேலாளர்கள், நடராஜன், அன்பு மலர் முன்னிலை வகித்தனர். இரண்டாம் நாளாக இன்று (6ம் தேதி) மதியம் 12:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை வாடிக்கையாளர்கள் சந்திப்பு முகாம் நடக்கிறது. முகாமில், சிறப்பு அம்சமாக, சிபில் உடனுக்குடனே தெரிந்து கொள்ளலாம். ஸ்பாட் ஷாங்ஷன் லெட்டர் வழங்கப்படுகிறது. இதில், புதுச்சேரியின் முன்னணி பில்டர்ஸ் மற்றும் கார் டீலர்ஸ் கலந்து கொள்கின்றனர்.முன்னதாக நடந்த நிகழ்ச்சியில், முதன்மை மேலாளர்கள் சரவணன், சீனுவாசன், பரணிதரன், ராஜசேகரன், சூரியபிரகாஷ் உட்பட வங்கி ஊழியர்கள் கலந்து கொண் டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை