மாநில குத்துசண்டை போட்டி
புதுச்சேரி : பாண்டிச்சேரி அமெச்சூர் பாக்சிங் அசோசியேசன் சார்பில் ஆண்கள், பெண்களுக்கான மாநில அளவிலான குத்துசண்டை போட்டி உப்பளம் ராஜிவ்காந்தி உள்விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கியது. போட்டியினை, பாண்டிச்சேரி அமெச்சூர் பாக்சிங் அசோசியேசன் தலைவரும், உழவர்கரை தொகுதி எம்.எல்.ஏ., சிவசங்கரன் துவக்கி வைத்தார். சங்க செயலாளர் கோபு, துணைத் தலைவர் முத்துகேசவலு, புதுச்சேரி ஒலிம்பிக் அசோசியேஷன் துணை தலைவர் ஜெய்ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். சப்-ஜூனியர், ஜூனியர், சீனியர் ஆகிய 3 பிரிவுகளில் நடந்த போட்டியில், 150க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா இன்று நடக்கிறது.