சமம் இயக்கத்தின் மாநில மாநாடு
புதுச்சேரி: புதுச்சேரி நவீனா கார்டன் திருமண மண்டபத்தில், சமம் இயக்கத்தின் 32வது ஆண்டு விழா மற்றும் 11வது மாநில மாநாடு நேற்று முன்தினம் நடந்தது. மாநாட்டில், இயக்கத் தலைவர் அன்பரசி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் மலர்விழி வரவேற்றார். அறிவியல் இயக்கத் தலைவர் மதிவாணன், புதுச்சேரி கிராம வங்கி தலைவர் ரத்தினவேல், அறிவியல் இயக்கத் பொதுச்செயலாளர் முருகவேல் ராஜா, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க புதுச்சேரி மாநில பொதுச்செயலாளர் இளவரசி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க அகில இந்திய செயலாளர் சுகந்தி, மாநில பொருளாளர் சைதை ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர். இதனைத் தொடர்ந்து, பிரதிநிதிகள் அவையில், கடந்த 2 ஆண்டுகளுக்கான இயக்கவேலை அறிக்கை, நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டன. மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு மற்றும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.