உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  மாநில அளவில் அபாகஸ், வேத கணித போட்டி

 மாநில அளவில் அபாகஸ், வேத கணித போட்டி

பாகூர்: பாகூர் சுபிக்ஷம் அபாகஸ் மற்றும் வேத கணிதம் அகாடமி சார்பில், 'அச்சீவர்ஸ் -25' என்ற தலைப்பில், 3வது மாநில அளவிலான, அபாகஸ் மற்றும் வேத கணித போட்டி உச்சிமேடு தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. சுபிக்ஷம்அபாகஸ் நிறுவனர்நாகலட்சுமி ஹரிஹரன் குத்து விளக்கு ஏற்றி விழாவினை துவக்கி வைத்தார். புதுவை தமிழ்ச் சங்க துணை தலைவர் திருநாவுக்கரசு, சித்த மருத்துவர் பூவிழி ஆகியோர் அபாகஸ் மற்றும் வேத கணித போட்டியை துவக்கி வைத்தனர். இப்போட்டியில், புதுச்சேரி, தமிழக பகுதியை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் கலந்து கொண்டு தங்களின் அபாகஸ் மற்றும் வேத கணித திறமைகளை வெளிப்படுத்தினர். தொடர்ந்து, நடந்த பரிசளிப்பு விழாவில், ஜெ.சி.எம்., மக்கள் மன்ற தலைவர் ரீகன் ஜான்குமார், டாக்டர் அமுதவாணி, செயின்ட் அந்தோணி பள்ளியின் முதல்வர் சுஜாதா ஆகியோர் கலந்து கொண்டு, அபாகஸ், வேத கணிதம், நாட்டியம், யோகா, செஸ், இந்தி, தட்டச்சு, இசை, போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினர். மாணவ - மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை