மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி துவக்கம்
திருக்கனுார் : மண்ணாடிப்பட்டு தொகுதி சுத்துக்கேணி ஸ்கை பந்தர்ஸ் சார்பில் முதலாம் ஆண்டு மாநில அளவிலான 8 ஓவர் கிரிக்கெட் போட்டி நேற்று துவங்கியது. இப்போட்டியினை தொகுதி எம்.எல்.ஏ.,வும், அமைச்சருமான நமச்சிவாயம் துவக்கி வைத்து, வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கினார். இதில், அ.தி.மு.க., நிர்வாகி சுத்துக்கேணி பாஸ்கரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். புதுச்சேரி மற்றும் தமிழகத்தை சேர்ந்த 22 அணிகள் பங்கேற்கும் இப்போட்டிகள், 3 சுற்றுகளாக வரும் 31ம் தேதி வரை நடக்கிறது. 8 ஓவர்கள் மற்றும் 8 நபர்களை மட்டும் கொண்டு நடத்தப்படும் இப்போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு முதல் பரிசாக ரூ. 15 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.12 ஆயிரம் மற்றும் கோப்பைகள் வழங்கப்படுகிறது.